வீட்டின் நுழைவாசலில் இந்தப் பொருள்கள் எல்லாம் வைக்க கூடாதா..?. அட இது தெரியாம போச்சே…

ஒரு வீட்டுக்குள் நாம் சென்றால் அது மங்களகரமாகத்தான் இருக்க வேண்டும் அதில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை நம் வீட்டு முன் வைக்க கூடாது அது என்னென்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வீட்டில் முதலில் நுழையும் போது வரவேற்பது நம் செருப்பாக தான் இருக்கும். அவ்வாறு போடக்கூடாது . செருப்புகளை மறைத்து தான் வைக்க வேண்டும்.

காலணிகள்

ஒரு சிலர் வீட்டின் நன்மைக்காக மாந்திரீக முறையில் தகடு செய்து வைப்பார்கள் இது உங்கள் குலதெய்வத்திற்கு ஒத்துக்கொள்ளுமா என தெரிந்து செய்ய வேண்டும்.

தகடு

கோவிலில் கொடுத்த பூக்கள் மற்றும் மாலைகளை நிலை வாசலில் தான் மாட்டி வைத்திருந்தால் அது காய்ந்த பிறகு எடுத்து விட வேண்டும்.

எலுமிச்சை, பூக்கள் மற்றும் மாலைகள்

அழகிற்காக வீட்டின் முன் நம் பல செடிகளை வளர்க்கிறோம். ஆனால் முள்(கற்றாழை) செடிகளை நிலை வாசலின் முன் வளர்க்கக்கூடாது.

அழகு செடிகள்

வீட்டின் முன் மகாலட்சுமி, பெருமாள், குபேரன் போன்ற சாமி படங்களை வைக்கக் கூடாது. விநாயகர் படம் வைத்துக் கொள்ளலாம்.

சாமி படங்கள்

பன்னீர் கொண்டு நிலை வாசலை துடைத்து சந்தனம் , குங்குமம் இட்டால் அது நல்ல உணர்வை உண்டாக்கி லட்சுமி கடாட்சமும் பெருகும்.

கஜலட்சுமி 2 யானைகளுடன் இருப்பது போலும் கண் திருஷ்டி விநாயகர் போன்ற படங்களையும் நிலை வாசலில் வைக்கலாம்.

தைப்பூசத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?.. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்குவோம்.!