ரோஹித் மற்றும் விராட் கோலி விரும்பினால் டி20 உலகக்கோப்பையில் விளையாடலாம்.! பிசிசிஐ

2024 டி20ஐ உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய ரோஹித் (ம) விராட் கோலிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

2022ம் ஆண்டுக்குப் பிறகு விராட் கோலி மற்றும்  ரோஹித் ஷர்மா இருவரும் இந்தியாவுக்காக எந்த டி20ஐயும் விளையாடவில்லை.

இந்தியா ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க உள்ளது.

ரோஹித் மற்றும் விராட் ஒரு வருடத்திற்கும் மேலாக டி20 விளையாடாததால், எனவே அவர்கள் டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டார்கள் என்று தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

அந்த விளக்கத்தின்படி, ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் விரும்பினால் அடுத்த ஆண்டு டி20 மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடலாம்.

இந்த தொடரில் விளையாடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய முழு அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும், ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களை எங்களால் நீக்க முடியாது. அவர்கள் இருவரும் எங்களின் மிகப்பெரிய வீரர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

ஒருவேளை டி20 போட்டியில் இருந்து ரோஹித் விலக முடிவு செய்தால், ஹர்திக் பாண்டியா அணிக்கு கேப்டனாக இருப்பார். இல்லையெனில் துணை கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை 2023 விருது வென்றவர்களின் பட்டியல்