Technology

ரூ.39,999 பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம்..50 எம்பி கேமரா.! ரெட்மியின் புதிய மாடல்.?

கடந்த நவம்பர் 29ம் தேதி ரெட்மி கே70 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானது.

ரெட்மி கே70 போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 3200 × 1440 (2K) பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே உள்ளது.

இந்த டிஸ்பிளே 120 ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 68.7 பில்லியன் நிறங்களை ஒருங்கிணைத்துக் காட்டக் கூடியது.

அட்ரினோ ஜிபியு இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

எல்இடி ஃபிளாஷுடன் கூடிய ஓஐஎஸ் (OIS)  50 எம்பி அல்ட்ரா-க்ளியர் மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்ட ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

செல்ஃபிக்காக பச்-ஹோல் கட்அவுட் உடன் 16 எம்பி கேமரா உள்ளது. இந்த கேமரா மூலம் 720 பிக்சல் முதல் 8K தெளிவுடன் வீடியோவை பதிவு செய்யலாம்.

209 கிராம் எடை கொண்ட ரெட்மி கே70 போனில் 5000 mAh லித்தியம் அயன் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

பிளாக், சன்னி ஸ்னோ, பாம்போ மூன் ப்ளூ, லைட் எக்பிளான்ட் பர்பிள் என நான்கு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ்ம் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் (ம) 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட 4 வேரியண்ட்கள் உள்ளன.

ரெட்மி கே70: 12 ஜிபி ரேம் - ¥2,499 (ரூ.29,400), 16 ஜிபி ரேம் - ¥2,699 (ரூ.31,700), 512 ஜிபி ஸ்டோரேஜ் - ¥2,999 (ரூ.35,299), 1 டிபி ஸ்டோரேஜ் - ¥3,399 (ரூ.39,999) என்ற விலையிலும் விற்பனைக்கு உள்ளது.

அறிமுகத்துக்கு தயாராகும் சியோமி 14 அல்ட்ரா.! வெளியான அம்சங்கள்.!