வெறும் ரூ.12,500 பட்ஜெட்..8ஜிபி ரேம்.. 5000 mAh பேட்டரி.! ரெட்மியின் புதிய மாடல்.?

Technology

சியோமி நிறுவனம் புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனை நைஜீரியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரெட்மி 13சி-ல் 6.74 இன்ச் டாட் டிராப் டிஸ்ப்ளே உள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது.

பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ், சைடு மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் வசதி உள்ளது.

ஆர்ம் மாலி-ஜி52 எம்சி2 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் ஆனது ரெட்மி 13சி போனில் பொருத்தப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா (ம) 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட ஏஐ டபுள் ரியர் கேமரா அமைப்பு. செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா

192 கி எடை கொண்ட ரெட்மி 13சி போனில், 5000 mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

மிட்நைட் பிளாக், நேவி ப்ளூ, கிளாசியர் வைட் மற்றும் க்ளோவர் க்ரீன் ஆகிய நான்கு நிறங்களில் 3 வேரியண்ட்கள் அறிமுகமாகியுள்ளன.

விலையை பார்க்கையில் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் NGN 98,100 (ரூ.10,100),  6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் NGN 108,100 (ரூ.11,200), 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் NGN 121,000 (ரூ.12,500) ஆக உள்ளது.

CINEMA

இனிமேல் நடிக்க மாட்டேன்! ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி?