Technology

50 எம்பி டெலிஃபோட்டோ கேமராவுடன் அறிமுகமாகிறது ரியல்மீ ஜிடி 5 ப்ரோ

ரியல்மீ நிறுவனம் அதன் ரியல்மீ ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போனை டிசம்பர் 7ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இதில் 2K ரெசல்யூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சம்ப்ளிங் ரேட் கொண்ட 6.78 இன்ச் அமோலெட் கர்வ்டு டிஸ்பிளே பொருத்தப்படலாம்.

அட்ரினோ 740 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் OIS அம்சத்துடன் 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா உள்ளது.

முன்புறத்தில் செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொருத்தப்படலாம்.

கிட்டத்தட்ட 220 கிராம் எடையுள்ள ரியல்மீ ஜிடி 5 ப்ரோவில் 5,400 mAh பேட்டரி மற்றும் சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 100 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

அதோடு 50 வாட்ஸ் கொண்ட வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரலாம்.

16 ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம்.

ரியல்மீ ஜிடி 5 ப்ரோ 4,000 யுவான் (ரூ.45,823) என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

சீனாவில் அறிமுகமானது ஒப்போ ரெனோ 11 ஸ்மார்ட்போன்