Cinema

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங் திருமண பத்திரிக்கை! குவியும் வாழ்த்துக்கள்!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகர் ஜாக்கி பக்னானி இருவரும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வருகிறார்கள்.

இருவரும் டேட்டிங் செய்து வந்த தகவல் வெளியே தெரிந்த பிறகு காதலிப்பதாக இருவருமே அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள்.

அந்த வகையில், ரகுல் ப்ரீத் சிங்கும், ஜாக்கி பாக்னானியும் வருகின்ற பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இவர்களது திருமணத்தை உறுதி செய்யும் வகையில், அவர்களுடைய திருமண அழைப்பிதழ் தற்போது வெளியாகி வைரலாகி கொண்டு வருகிறது.

இந்த ஜோடி கோவாவில் தங்கள் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

இவர்களுடைய திருமணத்திற்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், உறவினர்கள் என பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்களாம்.

இவர்களுடைய திருமண பத்திரிகை வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க தொடங்கி விட்டார்கள்.

அதன் பிறகு தான் திருமணம்! த்ரிஷா எடுத்த அதிர்ச்சி முடிவு!