Cinema

பூஜா கண்ணனுக்கு நிச்சியதார்த்தம்! ஜாலியாக கொண்டாடிய சாய் பல்லவி!

நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் வினீத் என்பவரை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

பூஜா கண்ணன் தனது சமூக வலைதள பக்கங்களில் 2 நாட்களுக்கு முன்பு மெஹந்தி போட்டிருந்த புகைப்படத்தை பகிர்ந்து தனக்கு நிச்சயதார்த்தம் என்பதை அறிவித்தார்.

இதன் பின் பூஜா கண்ணன் மற்றும் வினீத் ஆகியோருடைய திருமண நிச்சியதார்த்த விழா சமீபத்தில்  நடைபெற்றது.

இருவருடைய குடும்பமும் பேசி இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்துள்ளனர்.

எனவே, தங்களுடைய குடும்பத்தாரின் முன்னிலையில், இருவரும் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்.

இவர்களுடைய நிச்சயதார்த்த விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வினீத் –  பூஜா கண்ணன் ஜோடிக்கு  தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தனது தங்கையின் நிச்சியதார்த்த விழாவில் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஜாலியாக கூட்டமாக நடனமும் ஆடி இருக்கிறார் சாய்பல்லவி. அதற்கான வீடியோவும் வைரலாகி வருகிறது.

மேலும், பூஜா கண்ணன் ஸ்டண்ட் சில்வாவின் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘ சித்திரை செவ்வானம்’ நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரமுக்கு அந்த மாதிரி நடிக்கவே தெரியாது! பரபரப்பை கிளப்பிய ராஜகுமாரன்!