Cinema

சிகப்பு உடையில் சிக்கென்னு இருக்கிங்க..! காஜல் அகர்வால்-ன் கியூட் கிளிக்.!

ஹோ கயா நா (2004) இந்தி படத்தில் அறிமுகமான காஜல் அகர்வால், பழனி(2008) படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

இதை தொடர்ந்து நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்ததன் மூலம் இளைஞர்கள் மனதில் தீராத இடம் பிடித்தார்.

அதன்பிறகு துப்பாக்கி, ஜில்லா, மாரி, விவேகம் என பல திரைப்படங்களில் நடித்து இன்னும் பிரபலமானார்.

இதற்கிடையில் படப்படிப்பு இல்லாத சமயங்களில் அடிக்கடி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கருப்பு நிற கோட் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டார் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இதைத்தொடர்ந்து தற்பொழுது சிகப்பு நிற சுடிதார் அணிந்து பல அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அட்டகாசமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகு சிலை, ஏஞ்சல் என்று வர்ணித்து வருகின்றனர்.

மேலும் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பட்டுப்புடவையில் பரவசம்.! கவர்ச்சி காட்டி கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனன்.!