Technology

சீனாவில் அறிமுகமானது ஒப்போ ரெனோ 11 ஸ்மார்ட்போன்

ரெனோ 11-ல் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சம்ப்ளிங் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.7 இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

மாலி ஜிசி8 எம்சி4 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 14.0 உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா, 32 எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ், 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ கால் செய்வதற்காக முன்புறத்தில் 32 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

184 கிராம் எடையுள்ள இந்த போனில் 4,800 mAh திறன் கொண்ட பேட்டரியும், சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 67 வாட்ஸ் பிளாஷ் சார்ஜிங் வசதியுள்ளது.

அப்சிடியன் பிளாக், புளோரைட் ப்ளூ மற்றும் மூன் ஸ்டோன் என மூன்று புதிய வண்ணங்களில் மூன்று வேரியண்ட்கள் அறிமுகமாகியுள்ளது.

ஒப்போ ரெனோ 11: 8ஜிபி / 256ஜிபி - ¥2,499 (ரூ.29,399), 12ஜிபி / 512 ஜிபி - ¥2,799 (ரூ.33,299), 12ஜிபி / 512 ஜிபி - ¥2,999 (ரூ.35,299)  என்ற விலையிலும் விற்பனைக்கு உள்ளது.

OpenAI நிறுவன தலைவராக சாம் ஆல்ட்மேன் தொடர்வார்..! அந்நிறுவனம் அறிவிப்பு.!