Technology

OpenAI நிறுவன தலைவராக சாம் ஆல்ட்மேன் தொடர்வார்..! அந்நிறுவனம் அறிவிப்பு.!

ஓபன்ஏஐ (OpenAI),  நவம்பர் 18ம் தேதி சாம் ஆல்ட்மேனை சிஇஓ பதவியில் இருந்து நீக்கியது.

ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடன் பல இடங்களில் வெளிப்படைத்தன்மையுடனும், தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாகவும் இல்லை எனவும் ஓபன்ஏஐ கூறியது.

சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதும், இணை நிறுவனர் கிரெக் பிராக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக, ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி நியமிக்கப்பட்டார்.

பிறகு சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாப்ட் உடன் இணைவதாக மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா அறிவித்தார்.

சாம் ஆல்ட்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு, ஓபன் ஏஐ நிறுவனத்தின் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இயக்குநர்கள் குழு பதவி விலக வேண்டும், இல்லையெனில் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாகக் கூறினார்கள்.

இப்போது சாம் ஆல்ட்மேன் மீண்டும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக தொடர்வார் என ஓபன்ஏஐ அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு போன்ல கூட 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே.. ஆன இதுல..? ஏமாற்றமளிக்கும் ஆப்பிள்.!