Technology

ஒன் பிளஸின் மிட் ரேஞ் சீரிஸ்… ஏப்.1ல் இந்தியாவில் அறிமுகமாகும் OnePlus Nord CE4!

OnePlus நிறுவனம் OnePlus Nord CE 4 என்ற மாடலை இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் ஏற்கனவே வெளியான OnePlus Nord CE2 மற்றும் OnePlus Nord CE3 5G இன் வரிசையில் OnePlus Nord CE 4 புதிய மேம்படுத்தல் மற்றும் ஸ்டைலிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைலில் இரண்டு பின்புற கேமராக்கள் செவ்வக வடிவில் இருப்பதால்,OnePlus Nord CE 4 ஸ்மார்ட்போனானது ரூ.25,000 விலையில் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ப்ராசஸர், சிறந்த சிபியு மற்றும் ஜிபியு செயல்திறனை கொண்டுள்ளது.

OnePlus Nord CE 4 மொபைலில் பின்புறத்தில் பளிங்கு போன்ற தோற்றத்துடன் இரண்டு கேமராக்கள் மற்றும் ரிங் ஃப்ளாஷ்லைட்டை கொண்டுள்ளது.

முதன்மை கேமரா எலக்ட்ரானிக் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS மற்றும் EIS) ஆகிய இரண்டையும் கொண்ட 50MP சென்சாரை கொண்டிருக்கும்.

OnePlus Nord CE 4 செல்ஃபிக்களுக்கான 16MP முன் கேமராவைக் கொண்டிருக்கும், Celadon Marble மற்றும் Dark Chrome ஆகிய இரண்டு கலர்களில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கைரேகை ஸ்கேனர் மற்றும் ஒரு செல்ஃபி கேமரா பன்ச்-யுடன் கூடிய AMOLED டிஸ்பிளே இருக்கலாம்.

இந்தியாவில் லாஞ்ச் ஆனது iQOO Z9 5G ! விலை எவ்வளவு தெரியுமா ?