Technology

புதிய அப்டேட்டுடன் AI ரேஸில் இணையும் ஒன்பிளஸ்!

புதிய அப்டேட்டுடன் ஒன்பிளஸ் 11 மற்றும் 12 மாடல் ஸ்மார்ட்போன்கள் AI ரேஸில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் 12 மாடல் அறிமுகத்துடன் ஏஐ அம்சங்கள் அறிவிக்கப்படும் என்று பயனர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும்,  அந்த அம்சங்கள் வழங்கப்படவில்லை.

முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான கூகுள், சாம்சங், ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (AI) அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இப்போது, ​​ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (AI) அம்சங்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இதில் ஒரு பகுதியாக சீனாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் AI  அம்சங்களை உள்ளடக்கிய புதிய அப்டேட்டுடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது OnePlus 11 மற்றும் 12 மாடல்களில் Al அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இது புகைப்பட எடிட்டிங், கட்டுரை சுருக்கங்கள், திரை உள்ளடக்கத்தை அங்கீகரிக்க ப்ரீனோ டச் போன்ற பயன்பாடுகளை மேற்கொள்ள கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இந்தியாவில் OnePlus 11 மற்றும் 12 மாடல்களில் புதிய அப்டேட்டுடன் Al அம்சங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.39,999 பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம்..50 எம்பி கேமரா.! ரெட்மியின் புதிய மாடல்.?