Technology

5,400mAh பேட்டரி..1 டிபி ஸ்டோரேஜ்.! ஒன்பிளஸ் 12-ன் அறிமுக தேதி இதுதான்..?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா டிசம்பர் 4ம் தேதி சீனாவில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ம் தேதி ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது.

இதில் 2K ஹைரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,  2,600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 6.82 இன்ச் பிஓஇ எல்டிபிஓ அமோலெட் கர்வுடு டிஸ்பிளே உள்ளது.

நீர் மற்றும் தூசிகளில் இருந்து பாதுகாக்க ஐபி68 ரேட்டிங் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.

இதில் அட்ரினோ 750 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்படலாம்.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்டையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை ஹாசல்ப்ளாடிற்கான ‘எச்’ பிராண்டிங் மற்றும் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

அதில் 50 எம்பி மெயின் கேமரா, 48 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்படலாம்.

100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்ட 5,400 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்படலாம்.

கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகமாகிறது.

16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 1 டிபி யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கலாம்.

இந்தியாவில் களமிறங்கும் இன்ஃபினிக்ஸ்-ன் பட்ஜெட் போன்.!