எப்பேர்ப்பட்ட சளியா இருந்தாலும் சரி இந்த வெற்றிலை குழம்பு போதும்..!

Lifestyle

வெற்றிலை என்றாலே நாம் தாத்தா பாட்டிக்கு தொடர்புடையது என்று ஒதுக்கி விடுகிறோம். ஆனால் இதில் ஒளிந்திருக்கும் நன்மைகளோ ஏராளம்.

வெற்றிலை வைத்து குழம்பு சூப்பரா செய்யலாம்.. அது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

எண்ணெய் =4 ஸ்பூன் சின்ன வெங்காயம் =1 கைப்பிடி பூண்டு =10 பள்ளு தக்காளி =2 வெற்றிலை =8 மிளகு =1 ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் மிளகாய்த்தூள் =1 ஸ்பூன் புளி =எலுமிச்சை அளவு

தேவையான பொருட்கள்:

ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு ,சின்ன வெங்காயம் ,பூண்டு, தக்காளி, வெற்றிலை ஆகியவற்றை வதக்கி, ஆற வைத்துக் அரைத்து  கொள்ளவும்.

செய்முறை:

பின்பு அதே பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான சீரகம் மற்றும் மிளகு சேர்த்து பின்பு நறுக்கிய வெங்காயத்தையும் சேர்க்கவும்.

இப்போது அரைத்த விழுதையும் சேர்த்து புளி  கரைசலையும் கலந்து விட்டு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி விடவும்.

மேலும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

இப்போது வெற்றிலையின் வாசத்தோடு ஆரோக்கியமான வெற்றிலை குழம்பு ரெடி.

இந்த நேரத்துல உடற்பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறையுமாம் ..!