பேன் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? கவலையை விடுங்க…இதோ தேர்வு!

Lifestyle

பேன் என்ற  பெயரை கேட்டாலே கை தானாக தலைக்கு போய்விடும் அந்த அளவுக்கு அதன் தொந்தரவை நாம் அனைவருமே அனுபவித்திருப்போம். 

நம் தலையில் பேன் இருந்தால் சரியாக தூங்க கூட முடியாது ஏனென்றால் அந்த அளவுக்கு அரிப்பு இருக்கும்.

குறிப்பாக இந்த பேன்  பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் ஆண்களை விட பெண்களிடமே அதிகமாக காணப்படுகிறது.

பேன் இருப்பவர்களிடம் அதிக நேரம் இருப்பது , அவர்கள் பயன்படுத்திய சீப்பு துண்டு, டிரஸ் போன்றவற்றை பயன்படுத்தும் போதும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களிடத்தில் விரைவாக பரவுகிறது.

மேலும் தலையை சரியாக பராமரிக்காமல் இருந்தால் கூட பேன்  வந்து விடும்.

ஒரு பேன் சராசரியாக 10 முட்டைகள் போடும். வாரத்தில் இது பேனாக மாறி நம் ரத்தத்தை உ றிஞ்சி விடும் ஆனால் இதன் வாழ்நாள் 30 நாட்கள் தான்.

இதனால் நமக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். மேலும் ஒரு சிலருக்கு உடல் எடை குறைவு, தலையில் துர்நாற்றம் ஏற்படும். இது ரத்த சோகையை கூட ஏற்படுத்தும்.

பேன் தொல்லை நீங்க வேப்ப இலைகளை அரைத்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வரவேண்டும். நான்கு வாரங்கள் தொடர்ந்து இதை செய்ய வேண்டும்.

மேலும் தலை குளித்த பின்பு சீப்பால் வார வேண்டும். அப்போதுதான் முற்றிலுமாக அந்த பேன் நீங்கும். அது மட்டும் இல்லாமல் வேப்பிலை கலந்த ஷாம்புகளை பயன்படுத்தலாம்.

வேப்ப எண்ணெய் (ம) தேங்காய் எண்ணெயை சம அளவு எடுத்து முடியின் வேர்க்கால்களில் தேய்த்து முடியை கழுவி வரவும். இம்முறையை வாரம் ஒருமுறை செய்து வரலாம்.

உங்கள் முடிக்கு தேவையான காய்ச்சாத பால் எடுத்துக் கொள்ளவும், அதிலே பத்து மிளகு எடுத்து கலந்து 20 நிமிடம் தலையில் ஊற  வைத்து பிறகு கழுவ வேண்டும்.

இந்த மிளகை நாம் பயன்படுத்தும் போது தலையில் எரிச்சலோ அல்லது அரிப்போ ஏற்படாது. பயப்படத் தேவை இல்லை.

ஆகவே இந்த முறைகளை பயன்படுத்தி பேனை ஒழிப்போம். முடியை பேணி காப்போம்.

LIFESTYLE

காபி நல்லதா.? கெட்டதா.? உங்கள் சந்தேகத்திற்கான சரியான தீர்வு இதோ.!