அடேங்கப்பா! இத்துனூண்டு பூண்டுல இவ்வளவு நன்மையா? வாங்க தெரிஞ்சுக்கலாம்

Lifestyle

பூண்டில் நாட்டுப்பூண்டு, மலைப்பூண்டு, கருப்பு பூண்டு, சீன பூண்டு என  பலவகை உள்ளது.

பூண்டில் உள்ள அல்லிசின் என்ற வேதிப்பொருள் நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு மருந்தாக உள்ளது.

சளி மற்றும் வாயு பிரச்சனைகளுக்கு ஒரு பள்ளு நாட்டுப்பூண்டை நெருப்பில் சுட்டு அதை சாப்பிட்டு வர வாயு பிரச்சனை குணமாகும்.

இந்த பூண்டு மாரடைப்பு மற்றும் ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கிறது.

பாலில் இரண்டு மூன்று பூண்டுகளை இடித்து போட்டு கொதிக்க வைத்து குடித்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது பூண்டு சேர்த்துக் கொள்வது மிக மிக அவசியமாகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் உள் நாக்கு பிரச்சனைகளுக்கு பூண்டு சாறை தேனுடன் கலந்து உள்நாக்கில் தடவி வரலாம் அல்லது விழுங்குவதற்கு கொடுக்கலாம்.

மேலும் பூண்டிலிருந்து பல மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது.

எனவே தினமும் நாம் 3- 4 பூண்டை உணவில் ஏதேனும் ஒரு வகையில் சேர்த்துக் கொண்டு வந்தால் நம் உடலில் பல நோய்கள் சத்தமே இல்லாமல் குணமாகும்.

ஸ்லேட் குச்சி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா.? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.