இப்படி பட்டாணி சாதம் பண்ணி பாருங்க! பிரியாணியே தோற்றுவிடும்!

Lifestyle

பட்டாணியை நம் உணவில் குழம்புகளாகவோ மற்றும் குருமா வகைகளிலும் சேர்த்து பயன்படுத்திருப்போம்.

வெஜிடபிள் பிரியாணி வகைகளில் கூட சேர்த்து பயன்படுத்தி இருப்போம். ஆனால் இன்று நாம் காண இருப்பது பட்டாணியை  மட்டும் வைத்து சாதம் செய்வது எப்படி என பார்ப்போம்.

பட்டை  = இரண்டு கிராம்பு   = 5 பச்சை மிளகாய்  = ஐந்து சோம்பு  = இரண்டு ஸ்பூன் சின்ன வெங்காயம்  = 10 இஞ்சி  = இரண்டு இன்ச் பூண்டு  = 10 புதினா  = ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி  = சிறிதளவு பெரிய வெங்காயம்  = ஒன்று எண்ணெய் = 4 ஸ்பூன் நெய்  = ஒரு ஸ்பூன் பட்டாணி  = ஒரு கப் அரிசி  = இரண்டு கப் தேங்காய்ப்பால்  = ஒரு கப்

தேவையான பொருட்கள் :

மிக்ஸியில் பட்டை, சோம்பு, கிராம்பு, பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் ,இஞ்சி பூண்டு, புதினா, கொத்தமல்லி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய்  மற்றும் நெய் சேர்த்து அதனுடன் பிரியாணி இலை மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போனபின் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

பிறகு ஊற வைத்த பட்டாணி அல்லது பச்சை பட்டாணியை சேர்த்து அதிலே கிளறவும்.

அரிசி, அதனுடன் தேவையான தண்ணீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் நான்கு விசில் வரும்வரை விடவும். இப்போது கம கம வென பட்டாணி சாதம் ரெடி.

பயணம் செய்யும்போது வாந்தி மற்றும் தலைவலியால் அவதிப்படுறீர்களா?