ஆஹா! வாழை இலையில் தினமும் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மையா…

Lifestyle

நம் முன்னோர்கள் எவ்வளவோ இலைகள் இருந்தாலும் வாழையிலேயே சாப்பிடுவதற்கு உகந்த இலை என பயன்படுத்தினார்கள். 

இலையில் சூடான உணவுகள் படும்போது உணவில் உள்ள அனைத்து நுண் சத்துக்கள் (ம) இலையின் சத்துக்களும்  சேர்ந்தே உடலுக்கு கிடைக்கும். 

வாழை இலையில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால், நம் உடலில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. 

இலையில் உள்ள குளோரோபில், அல்சர் (ம) வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் தீர்வு ஆகிறது. மேலும் நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இளநரையை கட்டுப்படுத்துகிறது. 

தினமும் நாம் இலையில் சாப்பிட்டு வந்தால் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. சிறுவயதிலே முதியவர் போன்ற தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மன அழுத்தம் உள்ளவர்கள் பசியின்மையால் அவதிப்படுவார்கள் அந்த நேரங்களில் மூன்று வேளையும் வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் பசியை தூண்டும்.

வாழை இலையில் உள்ள சத்துக்கள் நம் உடலில் உள்ள பித்தம், வாதம், கபம் ஆகியவற்றை சமநிலைப்படுத்த உதவுகின்றன.

வாழை இலையில் உள்ள குளோரோபில் தோல் நோய்களுக்கு குணம் அளிக்கிறது.

பழங்கால முதல் இன்று வரை கிராமப்புறங்களில் பாம்பு கடித்தால் வாழ தண்டின் சாறை கொடுப்பார்கள் . இது விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களை வாழை இலையில் தேன் தடவி படுக்க வைப்பதன் மூலம் விரைவில் குணமாகும்.

சுப நிகழ்ச்சிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் முதலுதவியாக வாழை இலையோ வாழை மரத்தின் சாறோ பயன்படுத்தப்படுகிறது.

LIFESTYLE

பேன் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? கவலையை விடுங்க…இதோ தேர்வு!