தைப்பூசத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?.. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்குவோம்.!

முருகனுக்கு உரிய தினமான தைப்பூசம், இந்த வருடம்(2024) ஜனவரி 25 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

அந்நாளில் யாரெல்லாம் வழிபடலாம், தைப்பூசத்தின் சிறப்பு, பூசம் துவங்கும் நேரம், வழிபாடும் நேரம் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒன்று சேரும் நாளையே தைப்பூசம் என்கிறோம்.

தைப்பூசத்தின் சிறப்பு :

பழனியில் ஆண்டி கோலத்தில் இருந்த முருகப்பெருமானுக்கு பார்வதி தேவி ஞானவேலை கொடுத்த தினமாக தைப்பூசம் கருதப்படுகிறது.

அந்த வேலை கொண்டுதான் திருச்செந்தூரில் அசுரர்களை அழித்து தேவர்களை காத்தார்.

இந்த தைப்பூச நாளை ஒட்டி தான் 48 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் பழனி செல்கிறார்கள்.

வேல் என்பது ஞானத்தையும் வெற்றியும் தரக்கூடிய உன்னதமான ஒரு பொருளாகும்.

சிவபெருமானும் பார்வதி தேவியும் ஆனந்த நடனம் ஆடிய தினமாகவும் இந்நாள் கூறப்படுகிறது.

மேலும் முருகப்பெருமான் சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த நாளாகவும் புராணங்கள் கூறுகிறது.

ஆகவே இன்று குரு வழிபாட்டிற்கு சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது. இன்று குபேர பூஜை செய்வது சிறப்பு.

காலை 9. 14 மணி

பூசம் துவங்கும் நேரம் :

காலை 9. 20 – 10.30 மாலை 6.15 – 7.30 

வழிபடும் நேரம் : 

ஆகவே இந்த தைப் பூசத்தன்று முருகப்பெருமானை வழிபாடு செய்து எல்லா வளமும்  பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வோம் .

உடைந்த மற்றும் பழைய விளக்குகளை என்ன செய்யணும்னு தெரியலையா? அப்போ இந்த பதிவை படிங்க..