கவரிங் நகை ரொம்ப கறுத்துப்போய்விட்டதா? இதை செய்யுங்க பளபளன்னு மின்னும்..!

Lifestyle

நீங்கள் போடும் கவரிங் நகை கறுத்து போய் இருந்தால் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே பளிச்சென்று தங்கம் போல மின்ன வச்சிடலாம்.

அதற்கு முக்கியமாக தேவைப்படும் பொருட்கள் நன்கு புளித்த தயிர், சாம்பல். சாம்பல் உங்களுக்கு எது கிடைக்கிறதோ அதனை எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக அடுப்பில் இருக்கும் சாம்பலாக இருந்தாலும் சரி, ஊதுபத்தி சாம்பலாக இருந்தாலும் சரி, கம்பியூட்டர் சாம்பிராணியின் சாம்பலாக இருந்தாலும் சரி தான்.

இந்த சாம்பலில் புளித்த தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டை உங்களது கறுத்து போன கவரிங் நகைகளில் எல்லா இடங்களிலும் படும்படி தடவி  5 முதல் 10 நிமிடம் காய வைக்க வேண்டும்.

அதன்பிறகு தண்ணீரில் நன்கு கழுவி பாருங்கள். உங்களது நகைகள் தங்கம் போல பளபளன்னு மின்னும்.

கிச்சன் கில்லாடிகளே..இந்த டிப்ஸயும் கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கோங்க..!