பிஸ்கட்டை தினமும் நீங்க இந்த மாதிரி சாப்பிட்டா இவ்வளவு ஆபத்தா?..

Lifestyle

பெரும்பாலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிஸ்கட்டே  காலை உணவாக இருக்கிறது. 

இது சாப்பிடுவதற்கு மிக எளிதாகவும் விரைவாகவும் சாப்பிடக்கூடிய பொருளாக இருப்பதால் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள். 

இதைப் பெற்றோர்களும் சத்தான உணவு தானே என்று திடமாக நம்புவது மேலும் இந்த பழக்கம் அதிகரிக்கிறது.

பிஸ்கட்டில் கலோரி அதிகம் இதனால் உடல் பருமன் போன்ற பிரச்னை ஏற்படும் .

நாம் சாப்பிடும் பிஸ்கட்டின் பொதுவான மூலப்பொருள் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை தான் அதாவது மைதாவை கொண்டு  பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது. 

இது நம் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை என பல மருத்துவர்கள் கூறுகின்றனர். 

குறிப்பாக கிரீம் பிஸ்கட், குளுக்கோஸ் பிஸ்கட் என பல வித பிளேவர்களில் வரும் பிஸ்கட்டுகள் நம் சாப்பிடும் போது அதிக விழிப்போடு இருக்க வேண்டும்.

பிஸ்கட்டில் சேர்க்கப்படும் ரசாயனம் (ம) பதப்படுத்தப்பட்ட பொருள்கள் குழந்தையின் குடலை பெரிதும் பாதிக்கின்றது.

நாம் பிஸ்கட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் தானிய பிஸ்கட்கள் அல்லது வெண்ணெய்-நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பிஸ்கட்கள் எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தைகள்  பால் மற்றும் டீ காபியில் பிஸ்கட்டை நினைத்து சாப்பிடுவதால் மலச்சிக்கல், அல்சர் மற்றும்  பிற்காலத்தில் டைப் 2 டயாபடிக் வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

எனவே பிஸ்கட் சாப்பிடுவதை குறைத்து அதற்கு மாறாக வேக வைத்த பயிறு வகைகள் மற்றும் பழங்கள்  எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

Thanks For Watching