Technology

இந்தியாவில் லாஞ்ச் ஆனது iQOO Z9 5G ! விலை எவ்வளவு தெரியுமா ?

இந்தியாவில் iQOO Z9 5G மார்ச்-13ம் தேதி அறிமுகம் ஆகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது  iQOO Z9 5G இன்று அறிமுகமாகி இருக்கிறது.

iQOO Z9 5G, இந்த ஸ்மார்ட் போனை  ₹20,000 பட்ஜெட் விலைக்கு சமீபத்தில் அறிமுகமான  Realme 12+ 5G , Samsung Galaxy F15 5G  போன்ற ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக களமிறக்கி உள்ளனர்.

iQOO Z9 5G போனை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

8 GB RAM, 128 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் போனின் விலை ₹19,999 மற்றும் 8 GB RAM,256 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் போனின் விலை ₹21,999 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

iQOO Z9 மொபைலானது 6.6-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட்,1,800 nits பிரைட்னெஸ் மற்றும் 300Hz தொடு திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான OS-ல் வெளியாகியுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு- 16 அப்டேட் வரை செய்துகொள்ளலாம்.

iQOO Z9 ஸ்மார்ட்போனில் 50MP சோனி IMX882 முதன்மை கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் போன்றவற்றை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

44W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 5,000mAh பேட்டரி வசதிகளுடன்.நெட்வொர்க் 5G, 4G LTE, மற்றும் WI-Fi, புளூடூத்,GPS, USB டைப்-சி போர்ட் ஆகிய அம்சங்களும் அடங்கும்.

மேலும், iQoo Z9 5Gயில்  டபுள் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதிகளும் உள்ளது.இது பிரஷ்டு கிரீன் மற்றும் கிராபீன் ப்ளூ என  இரண்டு நிறங்களில் வெளியாகியுள்ளது.

இன்று வெளியாகி உள்ள இந்த iQOO Z9 5G போனானது Amazon India மற்றும் iQOO ஆகிய ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு வந்துள்ளது.

இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்!