Technology

வெளியீட்டிற்கு முன்பே கசிந்த விலை.! ஐக்யூ-வின் எந்த மாடலுக்கு தெரியுமா.?

ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் 12ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக டிசம்பர் 6ம் தேதி மலேசியாவிலும், 7ம் தேதி இந்தோனேஷியாவிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இதில் 1.5K ரெசல்யூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் பிஓஇ ஓஎல்இடி அமோலெட் கர்வுடு டிஸ்பிளே இருக்கலாம்.

அட்ரினோ 750 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட, புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் பொருத்தப்படும்.

ஓஐஎஸ் அம்சம் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ராவைட் மற்றும் 64 எம்பி டெலிஃபோட்டோ கேமரா இருக்கலாம். செல்ஃபிக்காக 16 எம்பி கேமரா பொருத்தப்படலாம்.

ஐக்யூ 12 5ஜி போனில் 5,000 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்படலாம். 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

லெஜண்ட் மற்றும் ஆல்பா ஆகிய வண்ணங்களில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என 2 வேரியண்ட்களில் வரலாம்.

தகவலின்படி, ஐக்யூ 12 5ஜி போன் விலை இந்தியாவில் ரூ.53,000 முதல் ரூ.55,000 வரை இருக்கும். இந்த போனின் எம்ஆர்பி ரூ.56,999 ஆக இருக்கும்.

5,000mAh பேட்டரி.. 8ஜிபி ரேம்..டூயல் ஸ்பீக்கர்ஸ்.! இந்தியாவில் அறிமுகமாகும் டெக்னோ மாடல்.?