IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.!

2024ஆம் ஆண்டில் நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மார்ச்-22ம் தேதி மோதவுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடர் தான் தல தோனி கடைசியாக விளையாட போகும் தொடர் என்று சென்னை அணி ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்தனர்.

இறுதி போட்டியில் CSK அணி வெற்றி பெற்று கோப்பையை வென்ற பிறகு அணியின் கேப்டனான தோனி தான் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட போவதாக உறுதி அளித்தார்.

அதை தொடர்ந்து ஒரு வருடமாக தல தரிசனத்தை மீண்டும் காண சென்னை ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை சென்னை அணியின் கேப்டனான தோனி ஐபிஎல் போட்டியின் பயிற்சியில் ஈடு பட சென்னைக்கு வந்து இறங்கினார்.

வருகையை சிறப்பிக்கும் விதமாக விஜய் நடித்த‘லியோ’படத்தில் வரும் போட்டோபிரேம் உடைக்கும் காட்சியையில் தோனி போட்டோ வைத்து சென்னை அணி வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

CSK அணியின் அதிகாரபூர்வ சமூகத்தளமான X -லும், இன்ஸ்டாக்ராமிலும் இந்த வீடியோ அதிகமாக வைரலாகி வருகிறது.

இந்த ஐபிஎல் தொடரும் தல தோனிக்கு கடைசியான ஐபிஎல் தொடர் என்ற பேச்சு வார்த்தை இணையத்தில் பரவி வருகிறது.

கடந்த ஆண்டை போல இந்த வருடமும்வெற்றிபெற்று  6-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசையில் சென்னை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

IPL 2024 : ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கொண்ட அணி எது தெரியுமா ..?