IPL 2024: குஜராத் டைட்டன்ஸில் இருந்து மும்பை இந்தியன்ஸ் திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா.!

17வது சீசன் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரானது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.

இதற்கான மினி ஏலம் முதல் முறையாக இந்தியாவில் நடைபெறாமல் டிசம்பர் 19ம் தேதி துபாயில் தொடங்க உள்ளது.

ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும், விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நவ-26ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.

இதற்கிடையில் ஏலத்திற்கு முன்னதாக சில அணிகள் வீரர்களை டிரேடிங் முறை மூலம் வாங்கியும் விற்றும் வருகின்றன.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக  விளையாடிய ஆவேஷ் கானை ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய தேவ்தத் படிக்கலை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன் ஒருவர் டிரேடிங் மூலம் அணி மாறுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கு வாங்கியது.

குஜராத் அணியில் கேப்டனாக நியமிக்கப்பட்டு முதல் தொடரிலேயே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றார். 2023ம் ஆண்டு IPL இறுதி போட்டிக்குக் கொண்டு சென்றார்.

ஹர்திக் பாண்டியாவிற்கு ஈடாக ரோஹித் ஷர்மா அல்லது ஜோஃப்ரா ஆர்ச்சர் குஜராத் அணியில் இணைவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் மற்றும் விராட் கோலி விரும்பினால் டி20 உலகக்கோப்பையில் விளையாடலாம்.! பிசிசிஐ