Technology

இந்தியாவில் களமிறங்கும் இன்ஃபினிக்ஸ்-ன் பட்ஜெட் போன்.! 

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) டிசம்பர் 8ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதில் பஞ்ச்-ஹோல் உடன் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,  500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட கூடிய 6.6 இன்ச்அளவுள்ள எச்டி+ எல்சிடி டிஸ்பிளே இருக்கலாம்.

இது ஸ்லிம் ஆக இருப்பதால் கையில் எளிதில் பிடிக்க முடியும் என இன்ஃபினிக்ஸ் தெரிவித்துள்ளது.

இப்போனில் பொருத்தப்பட்டுள்ள பிராசஸர் குறித்து வெளியாகவில்லை. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையில் ஆன எக்ஸ்ஓஎஸ் 12 மூலம் இயங்கலாம்.

இந்த போனின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கையில், எல்இடி பிளாஷ் கொண்ட டபுள் ரியர் கேமரா அமைப்பு இருக்கலாம். இதில் கொடுக்கப்பட்டுள்ள சென்சார்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

இதில் 5000 mAh திறன் கொண்ட பேட்டரி (ம) யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

ஸ்மார்ட் 8 எச்டி 128 ஜிபி யுஎப்எஸ் 2.2 ஸ்டோரேஜூடன் வரலாம். 4 முதல் 6 ஜிபி  ரேம் இருக்கலாம்.

கிரிஸ்டல் கிரீன், கேலக்ஸி ஒயிட், ஷைனி கோல்ட் மற்றும் டிம்பர் பிளாக் ஆகிய நான்கு வண்ணங்களில் வெளியாகலாம்.

50 எம்பி டெலிஃபோட்டோ கேமராவுடன் அறிமுகமாகிறது ரியல்மீ ஜிடி 5 ப்ரோ