பார்லர் போகாமலே உங்க முகம் பளிச்சுனு ஆக இதோ சூப்பரான டிப்ஸ்…
Lifestyle
வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்து எப்படி முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்வது இன்று இந்த பதிவில் நாம் வாசிப்போம்.
பப்பாளி பழத்தை மசிந்து அதனுடன் தேன் கலந்து 20 நிமிடங்கள் போட வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் போட்டு வந்தால் முகம் நன்கு பளபளப்பு ஆகிவிடும்.
கடலை மாவுடன் தயிர் மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலந்து முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
கற்றாழை ஜெல், பாசிப்பயிறு மாவு, தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் இளமையாக இருக்கும்.
ஆரஞ்சு சாறு, கஸ்தூரி மஞ்சள் தூள், கோதுமை மாவு மற்றும் தயிர் கலந்து 20 நிமிடம் தடவி முகத்தை கழுவி வந்தால் முகம் ஜொலி ஜொலிக்கும்.
வாழைப்பழத்தை மசிந்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் ஒரு இருபது நிமிடம் தடவி முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கி முகம் சாஃப்ட்டாக இருக்கும்.
வெள்ளரி சாற்றை இரவில் தடவி காலையில் முகம் கழுவி வர முகம் பளபளப்பு தந்து கருவளையம் நாளடைவில் மாறும்.
முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவினால் இளமையான தோற்றம் கிடைக்கும்.
முட்டைக்கோஸ் சாற்றை 15 நிமிடம் தடவி முகத்தை கழுவி வர முகச்சுருக்கம் எளிதில் வராமல் இருக்கும்.
எனவே இயற்கையான முறைகளை பயன்படுத்தி நம் சருமத்தை பேணி காப்போம்.
Sleep : நீங்கள் குப்புற படுத்து தூங்குவதால் இந்த பிரச்னைகள் எல்லாம் ஏற்படுமா..? வாங்க பார்க்கலாம்..!
Learn more