Technology

UPI மூலம் தவறான எண்ணிற்கு பணம் அனுப்பிட்டிங்களா? திரும்ப பெற என்ன செய்யலாம்?

UPI மூலம் தவறான மொபைல் எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டால், நீங்கள் அதை எவ்வாறு திரும்பப் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுபிஐ (UPI - Unified Payment Interface) அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

முன் பின், தெரியாத நபருக்கு அனுப்பட்ட பணத்தை மீட்டெடுக்க, பரிமாற்றம் தவறானவது என்று நிரூபிக்கப்பட்டவுடன், அந்த பரிவர்த்தனையை சரி பார்ப்பது வங்கியின் பொறுப்பாகும்.

இந்திய ரிசர்வ் வங்கி இது பற்றி விளக்குகையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஒபட்சு மேன் (Ombudsman) என்ற திட்டத்தின் படி, குறைதீர்ப்பாளரிடம் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளது.

சரியான நேரத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்.

அதாவது தவறான எண்ணிற்கு UPI மூலம் பணம் அனுப்பினால் புகாரளித்த 2 நாள் பணத்தை திரும்ப பெறலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

அதற்கு, தவறாக பணம் அனுப்பிய பேமெண்ட் விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கணக்கு எண்களுடன் வங்கியில் புகாரளிப்பது அவசியம்.

UPI பயன்படுத்தப்படும் ஆப்களின் ஹெல்ப்லைன் எண்கள்

1800-419-0157

080-68727374

0120-4456-456

18001201740

UPI மூலம் தவறாக பணம் அனுப்பினால் நீங்கள் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI)  என்ற இணைத்தளத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும்.

அதில் கொடுக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் நிரப்பி சமர்ப்பிக்கவும். எல்லாம் சரியாக இருந்தால் பணம் திரும்ப கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்டுடன் AI ரேஸில் இணையும் ஒன்பிளஸ்!