Technology

இனி புதிய கேம்-ஐ டவுன்லோட் செய்ய தேவையில்லை..! யூடியூப் அசத்தல் வசதி.!

யூடியூப்பில் கேம் விளையாடும் ‘யூடியூப் பிளேயபிள்ஸ்’ (Google Playables) அம்சத்தை கூகுள் கொண்டு வந்துள்ளது.

இந்த அம்சம் மூலம் பயனர்கள் பல்வேறு கேம்களை டவுன்லோட் செய்யாமலோ (அ) இன்ஸ்டால் செய்யாமலோ விளையாட முடியும்.

இதனால் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் தேவையற்ற பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்யத் தேவை இல்லை.

இதில் சோதனைக்காக ஒரு சில விளையாட்டுகள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதில் ஆங்கிரி பேர்ட்ஸ் ஷோ டவுன், பிரைன் அவுட், டெய்லி கிராஸ்வேர்ட் மற்றும் ஸ்கூட்டர் எக்ஸ்ட்ரீம் ஆகியவை அடங்கும்.

யூடியூப்பில் கேம்களை விளையாடக்கூடிய இந்த அம்சம் தற்போது யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

பிளேயபிள்ஸின் முழு வெளியீட்டிற்கான தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த யூடியூப் பிளேயபிள் அம்சம் 2024ம் ஆண்டின் முதல் பாதியில் அனைத்து பயனர்களுக்கும் வழங்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

5,400mAh பேட்டரி..1 டிபி ஸ்டோரேஜ்.! ஒன்பிளஸ் 12-ன் அறிமுக தேதி இதுதான்..?