எப்பேர்பட்ட முகப்பருக்களாக இருந்தாலும் சரி இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!

Lifestyle

தினமும் மூன்று முறை முகம் கழுவவும், வாரத்திற்கு மூன்று முறை தலைக்கு குளிக்கவும், தண்ணீர் அதிகம் குடிக்கவும். தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தை கழுவ வேண்டும்

வேப்ப இலை சிறிது எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பருக்கள் மீது வைத்து வர பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளும் நீங்கும்.

கடலை மாவுடன் ரோஸ் வாட்டர் கலந்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வெளியில் சென்று வந்த பிறகு போட்டு வரலாம்.

கடுக்காய், துளசி, சந்தனம், வேப்பிலை, மஞ்சள், அதிமதுரம் பொடிகளை தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். மசாஜ் செய்யக்கூடாது.

இவ்வாறு 40 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பருக்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.

இந்த முறையை பயன்படுத்தும் போது கெமிக்கல் கலந்த க்ரீம், ஃபேஸ் வாஷ் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

முகத்தை கழுவ கடலை மாவு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். வறண்ட சருமமாக இருந்தால் பச்சை பயிறு மாவு பயன்படுத்தி முகத்தை கழுவலாம்.

ஆவியில் வேக வைத்த உணவுகள், பழங்கள் மற்றும் கீரைகளை அதிகளவு எடுத்து கொண்டு எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இந்த முறைகளை பயன்படுத்தினால் மிக விரைவில் எப்பேர்பட்ட பருவாக இருந்தாலும் சரி செய்யலாம்.

உங்க பிரிட்ஜில் இதெல்லாம் வைத்திருக்கிறீர்களா? அப்போ இனிமே வைக்காதீங்க!