Cinema

விக்ரமுக்கு அந்த மாதிரி நடிக்கவே தெரியாது! பரபரப்பை கிளப்பிய ராஜகுமாரன்!

நடிகர் விக்ரம் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் சரி, எந்த மாதிரி கெட்டப்பிலும்  சரி அதற்கேற்ப தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி விடுவார் என்றே கூறலாம்.

இவருடைய நடிப்பை பற்றி சொல்லிதான் தெரிய வேண்டும் என்று இல்லை.

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு நடிப்பு இலக்கணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் விக்ரமுக்கு க்ளோசப் ஷாட் வைத்தால் எப்படி நடிக்க வேண்டும் என்று கூட தெரியாது என சமீபத்திய பேட்டி ஒன்றில்  இயக்குனர் ராஜகுமாரன் கூறினார்.

இது குறித்து பேசிய இயக்குனர் ராஜகுமாரன் ” என்னைப்பொறுத்தவரை விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்பதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

ஏனென்றால், விக்ரமால் தன்னுடைய கெட்டப்களை மாற்றி மாற்றி வேண்டுமானால் நடிக்க முடியும்.

உடல் எடையை அதிகரித்து மற்றும் குறைத்தும் நடிக்க முடியும்.

அவரால் ரஜினி அல்லது கமல்ஹாசனைப் போல் நடிக்க முடியாது.

ஏனென்றால், க்ளோஸ் அப் ஷாட் வைக்கும் போது அந்த காட்சிகளில் எந்த மாதிரி முகபாவனையை வெளிப்படுத்தி நடிக்க வேண்டும் என்பது விக்ரமுக்கு தெரியாது.

நான் அவரை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கிய போது எனக்கு இந்த விஷயம் தெரிய வந்தது” என ராஜகுமாரன் கூறியுள்ளார்.

ராஜகுமாரன் பேசியதை பார்த்த ரசிகர்கள் அப்போ நீங்க பிதாமகன், தெய்வதிருமகள் படங்கள் பார்க்கவில்லை என கூறி வருகிறார்கள்.

பாலிவுட் வாய்ப்பை மிஸ் செய்த த்ரிஷா! அலேக்காக தூக்கிய சமந்தா!