Cinema

கண்ணுக்குள்ள நிக்குது! புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங்கை மிரள வைத்த புது திரைப்படம்?

பிரபல நடிகையான நடிகை ரகுல் ப்ரீத் சிங்,சக நடிகரான ஜாக்கி பக்னானியை காதலித்து கடந்த பிப்ரவரி 21 மதியம் கோவாவில் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்ததை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் மீண்டும் தான் கமிட் ஆகி இருக்கும் படங்களில் நடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில் இந்த பிஸியான நேரத்திலும் கூட புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் வெளியான ஷைத்தான் படத்தையும் பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

படத்தை பார்த்துவிட்டு ரகுல் ப்ரீத் சிங்"ஷைத்தான் மிகவும் அருமையான படம்.. என்ன கதைக்கரு, மனதைக் கவரும் நடிப்பு, கண்ணை கூட மூட முடியவில்லைகண்ணுக்குள் நிக்குது வாழ்த்துக்கள்”என கூறியுள்ளார்.

இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி  ‘ஷைத்தான்’ திரைப்படம் வெளியானது.

இதில் அஜய் தேவ்கன், கோலிவுட் நடிகை ஜோதிகா மற்றும் ஆர் மாதவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படத்தை பார்த்துவிட்டு புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங் தனது விமர்சனத்தை கூறியிருப்பது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.

அத மட்டும் விடவே மாட்டேன்! நடிகை ரித்திகா சிங் பிடிவாதம்!