இனிமே நல்லா பழுத்த வாழைப்பழத்தை தூக்கி போட்டுறாதிங்க..! அதை வைத்து சூப்பரா அல்வா செய்யலாம்..!

Lifestyle

பழுத்த வாழைப்பழத்தை வைத்து அல்வா  எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்..

வாழைப்பழம் – 3  சோளமாவு - 2ஸ்பூன் சர்க்கரை - 1 கப் நெய் - கால் கப் முந்திரி - 10-15

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் மற்றும் கான்பிளவர் மாவை கால் கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரைக்கு கால் கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் பாகு தயார் செய்து தேன் கலர் வரும் வரை வேக விடவும்.

இதுதான் நாம் செய்யும் அல்வாவிற்கு ஒரு நல்ல கலரை கொடுக்கும். ஏனென்றால் ஃபுட் கலர் எதுவும் சேர்க்கப் போவதில்லை.

கலர் மாறியதும் முக்கால் கப் அளவு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதிலே முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.

அதே நெய்யில் அரைத்து வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கெட்டியாகி வாழைப்பழம் பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்.

கெட்டியான பிறகு சர்க்கரை பாகுவையும் சேர்த்து அந்த சக்கரை பாகுவின் தண்ணீர் வற்றி  அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி வரவும்.

கெட்டியான பின் முந்திரியையும் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். அதை தனியே ஒரு வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும் இப்போது சுவையான பனானா அல்வா ரெடி..

உங்கள் வீட்டில் வாழைப்பழம் உள்ளதா..? அப்ப இந்த அசத்தலான ரெசிபியை செய்து பாருங்க…!