உங்க பிரிட்ஜில் இதெல்லாம் வைத்திருக்கிறீர்களா? அப்போ இனிமே வைக்காதீங்க!

Lifestyle

உருளைக்கிழங்கை நாம் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. ஏனென்றால் அதில் உள்ள ஸ்டார்ச் சத்து வீணாகி விடும்.

உலகத்திலேயே கெட்டுப் போகாத பொருள் என்றால் அது தேன் மட்டுமே. இதை நாம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

தக்காளியை நாம் பிரிட்ஜில் வைத்தால் அதன் சுவை மாறுபடும் மற்றும் அதன் தரமும் குறைந்துவிடும்.

ஊறுகாய்,ஜாம்,பிரட், மாவு பாக்கெட் போன்றவற்றை நாம் பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை. ஏனென்றால் இதிலேயே பதப்படுத்தக் கூடிய பொருள்கள் இருக்கும்.

பூசணிக்காய் (ம) வெங்காயம் பூண்டை  நாம் காற்றோட்டமான இடத்தில் தான் வைக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது.

வாழைப்பழம், முலாம்பழம் பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் தோல் கருமையாகி கெட்டுவிடும். நறுக்கிய பழம் கவரில் வைக்கலாம்.

இஞ்சி, ஆரஞ்சு பழம் போன்றவற்றையும் வைக்க தேவையில்லை. இஞ்சியை பிரிட்ஜில் வைத்தால் அதில் நுண்ணுயிரிகள் வளர்ந்து விடும்.

பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் வகைகள் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்க தேவையில்லை.

மேலும் குழம்பு வகைகள் சட்னி வகைகள் போன்றவை மீதமானால் அதை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவோம். அவ்வாறு செய்வது மிகவும் தவறானதாகும்.

காலையில் வேலையை எளிது படுத்த நாம் இரவே காய்களை நறுக்கி பிரிட்ஜில் வைத்து விடுவோம். இவ்வாறு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகி வெறும் சக்கையை மட்டுமே சாப்பிடுவோம்.

இட்லி மற்றும் தோசை மாவை அரைத்து ஒரு நாள் வெளியே வைத்து இயற்கையாக புளிக்கச் செய்யவும். அடுத்த நாள் பிரிட்ஜில் வைத்து 2-3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

முட்டையின் செல்லில் சால்மோனிலா பாக்டீரியா உருவாகும் என்பதால் அதை பிரிட்ஜில் வைத்து சமைப்பதை தவிர்க்கவும்.

எனவே ஃப்ரிட்ஜில் தேவையில்லாத பொருட்களை வைக்காமல், எளிதில் கெட்டுப் போகக்கூடிய பொருள்களை மட்டுமே வைத்து பயன்படுத்துவது சிறந்தது

அடிபிடித்த பாத்திரங்கள் ஐந்தே நிமிடத்தில் பளபளக்க சூப்பரான 5 டிப்ஸ் இதோ.!