உங்கள் வீட்டில் வாழைப்பழம் உள்ளதா..? அப்ப இந்த அசத்தலான ரெசிபியை செய்து பாருங்க…!

Lifestyle

இந்த பதிவில், வாழைப்பழத்தை வைத்து அசத்தலான வாழைப்பழ புட்டு செய்யும் முறையைப் பற்றி பார்ப்போம்.

வாழைப்பழம் – 3 கப் சர்க்கரை – ½ கப் வெல்லம் – ½ கப் துருவிய தேங்காய் – 1 ½ கப் புட்டு மாவு - 2 கப் உப்பு – தேவையான அளவு

தேவையான பொருட்கள் :

முதலில் வாழைப்பழத்தை எடுத்து தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, வெல்லம் (ம) துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்கு புட்டு மாவு சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து சூடான நீரை சேர்த்து புட்டு மாவை பிசைந்து கொள்ள வேண்டும்.

அதாவது புட்டு மாவை பொருத்தவரை கையில் பிடித்தால் மாவு உதிராமல் இருக்க வேண்டும். பின், இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பாத்திரத்தின் அடித்தட்டை வைத்து இரண்டு கிண்ணங்களை எடுத்து அதில் எண்ணெயை தடவ  வேண்டும்.

அடிப்பகுதியில் சிறிதளவு வாழைப்பழத்தை போட்டு, அதன் மீது சிறிது புட்டு மாவை சேர்த்து அதன் மேல் மறுபடியும் வாழைப்பழத்தை பரப்பி இரண்டு கிண்ணங்களையும் இட்லி பாத்திரத்தில் அவிக்க வேண்டும்.

10 நிமிடம் வேகவிட்டு அடுப்பில் இருந்து இறக்கிக்கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான வாழைப்பழ புட்டு தயார்.

கவரிங் நகை ரொம்ப கறுத்துப்போய்விட்டதா? இதை செய்யுங்க பளபளன்னு மின்னும்..!