காலில் கருப்பு கயிறு கட்டுவது சரியா?..

இன்று பலரும் கால்களில் கருப்பு கயிறு கட்டுகின்றனர் இது சரியா மற்றும் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது போன்ற சந்தேகங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..

எத்தனை வயதானாலும் இந்த கண் திருஷ்டி சுலபமாக ஒருவரை தாக்கி விடும். இந்த திருஷ்டியை போக்க பல வழிகள் உள்ளது அதில் ஒன்றுதான் இந்த காலில் கருப்பு கயிறு கட்டும் முறை.

குறிப்பாக பூப்படைந்த பெண்களின் காலில் கட்டி விடுவார்கள். சற்றென்று ஒருவர் பார்க்கும் போது ஏற்படக்கூடிய குரோத எண்ணங்கள் நம்மை தாக்காமல் இருக்கும்.

ஆண்கள் என்றால் வலது கால்களிலும் பெண்கள் என்றால் இடது காலிலும் அணிந்து கொள்ளலாம். 

ஐந்து அல்லது ஒன்பது முடிச்சு போடப்பட்டிருக்கும் கயிறுகளை நம் கால்களின் அளவிற்கு ஏற்ப அளந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறைகள் :

மேலும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்து கட்டிக் கொள்வது மிகச் சிறப்பு. 

இல்லையென்றால் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு போன்ற கிழமைகளில் பைரவர், காளி போன்ற தெய்வங்களை வழிபாடு செய்தும் கட்டிக் கொள்வது நல்லது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் கட்டிக் கொள்ளலாம் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் கட்டிக் கொள்ளலாம்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

கோவிலுக்கு செல்லும்போது இதனால் தான் கருப்பு உடை அணிய கூடாதா?..