சரித்திரம் படைத்த டேவிட் வார்னர்.. ஸ்டீவ் வாக் சாதனை முறியடிப்பு..!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

வார்னர் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், இந்த காலகட்டத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.

இதன் மூலம் வார்னர் ஸ்டீவ் வாக் சாதனையை டேவிட் வார்னர்  முறியடித்தார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது சர்வதேச கிரிக்கெட்டில் 18,496 ரன்கள் எடுத்திருந்தார்.

அதே சமயம், தற்போது வார்னர் ஸ்டீவ் வாக்கை முந்தியுள்ளார்.

டேவிட் வார்னர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 18,502 ரன்கள் எடுத்துள்ளார். 

இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ளார்.

ஐபிஎல் அதிரடிகள்.! மும்பை சென்ற ஹர்திக் பாண்டியா..! கேப்டனாக மாறிய சுப்மன் கில்.!