அடடே! சோறு வடித்த தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

Lifestyle

நவீன காலத்தில், அரிசி வேக வைப்பதில் குக்கர் பயன்பாடு அதிகம் வந்துவிட்டது.

அந்த வகையில் நாம் இன்று சாப்பாடு வடித்து சாப்பிடும் போது எவ்வளவு நன்மைகள் உள்ளது என இந்த பதிவில் வாசிப்போம்.

சாதம் வடித்த தண்ணீரில், ஸ்டார்ச் கார்போஹைட்ரேட் தயமின் மற்றும் ரிபோபிலாவின் போன்ற சத்துக்கள் நிறந்துள்ளது.

வறட்டு இருமல், வாய் வறட்சி உள்ளவர்கள், சாதம் வடித்த தண்ணீர் 1 ஸ்பூன் சேர்த்து 1 மணி நேரத்திற்கு ஒரு முறை 500ml வீதம் ஒரு நாளைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.

சுவாச மண்டலத்தில் பிரச்சனை இருந்தால் அதேபோல் 500ml வடித்த தண்ணீரில் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் மிளகு 1/4 ஸ்பூன் சேர்த்து கலந்து குடிக்கவும்.

ரத்த சர்க்கரை அளவு அளவு கம்மியாக இருப்பவர்கள் கல் உப்பு சேர்த்து குடித்து வர சரி ஆகும்.

பித்த தலைவலிக்கு சூடான கஞ்சியை பருக வேண்டும். நாள் முழுவதும் புத்துணர்ச்சி கொடுக்கும்.

குறிப்பாக நீர் கடுப்புக்கு சிறந்த அருமருந்தாகும். இதற்கு வடித்த பழைய தண்ணீரை உப்பு போடாமல் பயன் படுத்தவும்.

வடித்த தண்ணீரை தலை முடிக்கு தேயித்து வந்தால் நல்ல அடர்த்தியாக வளரும். மேலும் இதை முக பருவிற்கு பயன்படுத்தினால் பரு மறையும்.

சாதம் வடித்த கஞ்சியில் ஒரிசனேஷ் என்னும் பொருள் இருப்பதால் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.

உடல் பருமனால் ஏற்படும் குதி கால் வலிக்கு வடித்த சூடு தண்ணீரில் 1/2 மணி நேரம் வைக்க சரி ஆகி விடும். உடல் உஷ்ணத்தை குறைத்து உடம்பை குளிறச்சி படுத்தும்.

பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிடலாமா? வேண்டாமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..