அடடே.! நாம் சொல்லும் நன்றிக்கு இவ்வளவு சக்தி இருக்குதா..!

Lifestyle

தினமும் நீங்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லிப் பாருங்கள் நிச்சயம் படிப்படியாக உங்கள் வாழ்க்கை மாறுவதை காணலாம்.

உதாரணமாக நீங்கள் ஒருவருக்கு ஒரு உதவி செய்து அதைப் பெற்றவர் உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டால் உங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சி அடையும்.

இந்த உலகில் எத்தனையோ பேருக்கு கை இல்லாமல் அல்லது கால் இல்லாமல் ஏன் ஒரு வீடு கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் நாம் நல்ல ஆரோக்கியத்தோடு, தங்குவதற்கு ஒரு வீடும், ஏன் இந்த பதிவை பார்க்க ஒரு டச் செல்போனும் வைத்திருப்போம் ஆனால் அதற்கு நன்றி சொல்லி இருக்கவே மாட்டோம்.

இல்லாத ஒன்றை நினைத்து கவலை கொள்ளாமல் இருப்பதற்கு முதலில் நன்றி சொன்னால் நிச்சயம் ஒரு நாள் இல்லாததும் கிடைத்து விடும்.

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரச்சனை இருக்கும் அது பணக்காரரோ ஏழையோ அல்லது நடுத்தர மக்களோ நிச்சயம் ஒரு பிரச்சனை இருக்கும்.

கால் இல்லாதவர்கள் கை உள்ளதே என்று நன்றி சொல்லுங்கள், கண் இல்லாதவர்கள் அடடே நமக்கு கேட்பதற்கு  காது இருக்கிறது என நன்றி சொல்லுங்கள்.

இருவேளை உணவு கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை நமக்கு ஒரு வேலையாவது உணவு கிடைக்கிறதே என்று  நன்றி சொல்லுங்கள்.

நன்றி சொல்வது என்றால் அது ஒரு வார்த்தை இல்லை நாம் மனதார உணர்ந்து மகிழ்ச்சியோடு நன்றி கூற வேண்டும்.

அத்திப்பழம் பிரியர்களே! அத்திப்பழம் சாப்பிடுவதற்கு முன்பு இதையும் தெரிஞ்சுக்கோங்க..