Ajay Ghosh act in many movies on tamil cinema

Cinema

முடியல! அஜய் கோஷ் வாழ்வில் இவ்வளவு கஷ்டமா? கண்கலங்க வைத்த சோக கதை!

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாகவும் காமெடியாகவும் நடித்த அஜய் கோஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பட்ட  கஷ்டங்களை மனம் திறந்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அஜய் கோஷ்”ஒரு காலத்தில் என் குடும்பம் வறுமையில் வாடியது. அந்த சமயம் எல்லாம் எனக்கு உடுத்த உடை கூட இருக்காது.யாரிடமாவது ஆடைகளைக்கேட்டு உடுத்துவது வழக்கம்.

அதைப்போல வெறும் சாதம் மாற்று பச்சை மிளகாய் வற்றல் சாப்பிட்ட நாட்கள் உண்டு. அந்தக் கஷ்டங்களிலிருந்து நான் ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்டேன்.

நான் சிறுவயதில் பள்ளிக்குச் சென்றபோது என் அப்பா மட்டும் தான் கஷ்டப்பட்டார். அதனை இப்போது நினைத்து பார்த்தால் கூட என்னுடைய கண்களில் கண்ணீர் வருகிறது.

அந்த சமயம் எல்லாம் எனக்கு வெறும் சாதம் இருந்தால் மட்டுமே போதும் என்று நினைப்பேன். அதைபோல நான் சாப்பிட்டுவிட்டு மிச்சம் இருந்ததை சோற்றை  அம்மா சாப்பிடுவது வழக்கம்.

அதை நினைக்கும் போது கூட என் கண்களில் கண்ணீர் வருகிறது. பல கஷ்டங்களை அனுபவித்தேன்.

நீங்களே யோசித்து பாருங்கள் இப்படியான கஷ்டங்களை நேரில் பார்த்தால் நமக்குள் எந்த அளவிற்கு வேதனை வரும். அந்த வேதனையில் இருந்து மீண்டு வர முடிவு செய்து கடினமாக உழைத்தேன்.

இப்போது நல்ல இடத்தில் இருக்கேன். இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும்” எனவும் கண்கலங்கி சற்று எமோஷனலாகவும் அஜய் கோஷ்  கூறியுள்ளார்.

அஜய் கோஷ் தமிழ் சினிமாவில் விசாரணை, தப்பு தாண்டா, மாரி 2 , நட்பே துணை , காஞ்சனா 3, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட வாய்ப்புகள் இல்லை! திருமணத்திற்கு தயாரான ரெஜினா?