பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமா அப்போ இந்த பதிவை படிங்க..

Lifestyle

பாதாம் பருப்பு சாப்பிடுவதில் பல சந்தேகங்கள் இருக்கும். ஒரு சிலர் பாதாம் தோலில் விஷம் உள்ளது. அதை ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும் என கூறுகிறார்கள்.

பொதுவாக தோல் என்றாலே பல நன்மைகளையும் குறிப்பாக அதிக நார் சத்துக்களை கொண்டிருக்கும். அதுபோல்தான் பாதாமின் தோலும்.

வெளிநாடுகளில் பாதாம் மாவு மிகவும் பிரபலமானது. இதை அரைக்கும் போது தோல் நீக்கி அரைக்கப்படும். இந்த மாவை பயன்படுத்தி கேக், பிஸ்கட் போன்றவை தயாரிக்கப்படும்.

இதை தோலுடன் அரைத்தால் ஒருவித நரநரப்பு போன்று இருக்கும். மேலும் தோலை நீக்கி செய்யும் போது அதன் சுவையும் அதிகரிக்கும். இதற்காக மட்டுமே தோலை நீக்கி விடுகிறார்கள்.

ஆனால் பாதாம் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளது. நார்ச்சத்து மற்றும் பிரீ பையாடி, பிளேவனாய்டுகள், பினாலிக் ஆசிட்கள், ப்ரோ ஆன்த்ரோசைனின் உள்ளது.

மேலும் ஃபுட் பாய்சனை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களை இந்த தோலில் உள்ள சத்துக்கள் தடுக்கிறது.

நமக்கு அச்சம் ஏற்படும் அளவிற்கு பாதாம் தோலில் ஆபத்து ஒன்னும் இல்லை. ஒரு சில வயிற்று பிரச்சனைகள் (ம) வாய்வு பிரச்சனைகளை உண்டாக்கும்.

இதில் ஆக்சனேட்டுகள் அதிகமாக இருப்பதால் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் பாதாம் பருப்பு எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் சற்று கவனத்தில் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாதாமை ஒரு நாள் ஒன்றுக்கு ஐந்து பருப்பு வீதம் எடுத்துக் கொள்வது சிறப்பு. அதுவே நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

அடடே! ஒவ்வொரு வாழைப்பழத்திலும் இவ்வளவு விஷயம் இருக்கா? வாங்க தெரிஞ்சிக்கலாம்!