செம்பருத்தி பூவை வைத்து தோசை சுடலாமா..! அது எப்படிங்க..?

Lifestyle

இந்த பதிவில் செம்பருத்தி பூவை வைத்து தோசை சுடும் முறை மற்றும் இந்த பூவின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

தோசைமாவு – 3 கப் செம்பருத்தி பூ – 20 சின்ன வெங்காயம் – 4 சீரகம் – சிரித்தளவு உப்பு – தேவையான அளவு

தேவையான பொருட்கள் :

செம்பருத்திப் பூவின் இதழ்களை மட்டும் நன்கு கழுவி எடுத்து, அதனை மிக்ஸில் போட்டு சின்ன வெங்காயம், சீரகம், உப்பு, ஒரு கப் தோசை மாவு சேர்த்து மை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் தடவி சூடேறியதும், அதில் தோசையை  மெல்லியதாக போட வேண்டும்.

பின் தோசை மேல் சிறிய வெங்காயம் நறுக்கியது மற்றும் கொத்தமல்லி தழைகளை தூவி சுட்டு எடுத்தால் சுவையான செம்பருத்தி தோசை தயார்.

இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

செம்பருத்தி பூவின் நன்மைகள்:

இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களுக்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை போக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று சர்க்கரை நோய். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பூ ஒரு சிறந்த மருந்தாகும்.

மேலும், இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன.  இது நமது உடலில்  பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.

எனவே மிகவும் எளிதாக கிடைக்க கூடிய இந்த செம்பருத்தி பூவை நாம் உணவில் சேர்த்து ஆரோக்கியத்தை பெறுவோம்.

இப்படி பட்டாணி சாதம் பண்ணி பாருங்க! பிரியாணியே தோற்றுவிடும்!