கரும்பை வைத்து அல்வா செய்யலாமா? அது எப்படிங்க..!

Lifestyle

கரும்புச்சாறு ஜூஸ் நாம் அனைவருமே குடித்திருப்போம் அந்த வகையில் கரும்பை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கரும்பு சாறு =2 கப் சோளமாவு =2 ஸ்பூன் முந்திரி =கால் கப் நாட்டு சக்கரை = 3 ஸ்பூன் உப்பு ஒரு சிட்டிகை ஏலக்காய் = 1/4 ஸ்பூன்

தேவையான பொருட்கள்:

கரும்பை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்,

செய்முறை:

அந்தச் சாறுடன் சோளமாவையும் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து வைக்க வேண்டும்.

பிறகு  ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.

அதே பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள கரும்புச் சாறை ஊற்றி மிதமான தீயில் கைவிடாமல் கிளற வேண்டும்.

சிறிது நேரத்தில் அது கெட்டி பதத்திற்கு வரும் அந்த நேரத்தில் நாட்டு சக்கரையும் உப்பும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பிறகு ஏலக்காய், முந்திரி மற்றும் மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கிளறினால் சுவையான கரும்புச்சாறு அல்வா தயார்.

பார்லர் போகாமலே உங்க முகம் பளிச்சுனு ஆக இதோ சூப்பரான டிப்ஸ்…