திருக்கார்த்திகைக்கு இந்த மாதிரி விளக்கு ஏற்றுங்கள்… ! சூப்பரா இருக்கும்…

கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

திருக்கார்த்திகை சந்திரன்  கார்த்திகை நட்சத்திரம் (ம)  பௌர்ணமி நட்சத்திரத்துடன் இணையும்போது  கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருந்து கொள்ளலாம்.

அன்று மாலை ஆலயம் சென்று விளக்கு ஏற்றிய பின் வீட்டுக்கு வந்து விளக்கேற்றி பூஜை முடித்த பின் தான் விரதத்தை முடிக்க வேண்டும்.

3 நாட்கள் தீபம் ஏற்றப்பட வேண்டும், பரணி நட்சத்திரம் அன்றும், திருக்கார்த்திகை அன்றும் அடுத்த நாள் அன்றும் ஏற்றப்பட வேண்டும்.

மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் தான் ஏற்ற வேண்டும் அதில் நல்லெண்ணெய் அல்லது நெய்யால் விளக்குகளை ஏற்றலாம்,

முதலில் வாசலில் விளக்கு ஏற்றிவிட்டு பிறகு பூஜை அறையில் ஏற்றினால் மகாலட்சுமியை நம் வீட்டுக்குள் வரவழைப்பது என நம்பப்படுகிறது.

வீட்டின் வாசலில் லட்சுமியின் அம்சமாக குத்து விளக்கு ஏற்றுவது சிறந்தது.

விளக்கை கிழக்கு முகம் நோக்கி ஏற்றினால் கஷ்டம் தீரும். மேற்கு - கடன் நீங்கும், வடக்கு - திருமண தடை அகலும். எனவும் கூறப்படும் .

எக்காரணத்தைக் கொண்டும் தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. அது இறந்தவர்களுக்காக ஏற்றும் திசையாக கருதப்படுகிறது

திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கு ஏற்றி வாழ்வில் சகல வளத்தையும் பெற்று வாழ்வில் நல்லவைகள் அனைத்தும் தீப ஒளி போல் பிரகாசிக்கட்டும்.

LIFESTYLE

உங்க வீட்டு மளிகை பொருள் சீக்கிரம் கெட்டுப் போகுதா? அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..