ஆஹா! திருவண்ணாமலை மலை மேல் ஏற்றப்படும் தீபத்திற்க்கு இவ்வளவு சிறப்பா…!

எத்தனையோ  கோவில்கள் இருந்தாலும் கார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பெற்றது திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் இது அக்னி ஸ்தலம் ஆக விளங்குகிறது.

இங்கு சிவன் மலையாகவே இருப்பதாக நம்பப்படுகிறது. முருகப்பெருமான் அருணகிரி நாதருக்கு காட்சியளித்த ஸ்தலமாகவும் கூறப்படுகிறது.

திருவண்ணாமலையில் பத்து நாள் முன்பாகவே கொடியேற்றம் செய்யப்படும்.இந்த 10 நாட்களும் பல்வேறு பூஜைகளும், வாகனப் புறப்பாடும் நடைபெறும்.

நவம்பர் 23ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும். அதை எடுத்து 10வது நாள் திருக்கார்த்திகை தீபத்தன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.

மாலை 6:00 மணிக்கு மலை மேல் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்று சிவன் அர்த்தநாதீஸ்வரர் ரூபத்தில் ஆனந்த தாண்டவம் ஆடி வருவதை தரிசிக்கலாம்.

மலை மேல் சுமார் ஆறு அடி உயரமும் 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 கிலோ நெய்யை ஊற்றி, ஆயிரம் மீட்டர் காடா துணியை திரியாக்கி தீபம் ஏற்றப்படும்.

மலையின் மேல் ஏற்றப்படும் தீபம் பத்து நாட்களுக்கு மேல் எரிந்து  கொண்டே இருக்கும். இத்தீபத்தை பத்து கிலோமீட்டர் தூரம் வரை தரிசிக்கலாம்.பிறகு பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

மலையை சுற்றிலும் சிவனடியார்களால் அன்னதானம் வழங்கப்படும். இங்கு விளக்கேற்றிய பிறகே அனைவரது இல்லங்ககளிலும் விளக்கேற்ற படுகிறது .

இந்த திருக்கார்த்திகை அன்று முருகப்பெருமான் ஆலயத்தில் குமாரலாய தீபமும், மற்ற சிவ ஆலயங்களில் பௌர்ணமியன்று சர்வாலய தீபமும், பெருமாள் கோவில்களில் விஷ்ணு ஆலய தீபமும் ஏற்றப்படுகிறது.

திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்து, மலையின் மேல் ஏற்றப்படும் ஜோதியை கண்டு, வாழ்வில் பிரகாசத்தை காண்போம்.

திருக்கார்த்திகைக்கு இந்த மாதிரி விளக்கு ஏற்றுங்கள்… ! சூப்பரா இருக்கும்…