Technology

லீக்கான ‘Xiaomi 14 Ultra’ போனின் டிசைன்!

சியோமி நிறுவனம் அடுத்ததாக “சியோமி 14 அல்ட்ரா” (xiaomi 14 ultra) ஐ அறிமுகம் செய்யவுள்ளது.

சியோமி 14 அல்ட்ரா சீரிஸ் ஆனது 12GB + 256GB, 16GB + 512GB மற்றும் 16GB + 1TB ஆகிய உள்ளடக்கத்தை கொண்டு அறிமுகம் ஆகும் என தெரிகிறது.

இந்த போன் ஆனது ‘Qualcomm Snapdragon 8 Gen 3 SoC’ மூலம் இயக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

2K தெளிவுத்திறன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளவை இந்த போன் கொண்டுள்ளது.

50எம்பி கேமராவும், 32 எம்.பி முன் கேமராவும் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்த போன் ஆனது 90W வயர்டு மற்றும் 50வார்ட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,180mAh பேட்டரி வசதியை கொண்டுள்ளது.

இது கருப்பு, வெள்ளை, பச்சை ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிகிறது.

இந்த “சியோமி 14 அல்ட்ரா” சீரிஸ் இந்தியாவில் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி அறிமுகம் ஆகும்.

“சியோமி 14 அல்ட்ரா” இந்தியாவில் ரூ74,990-க்கு அறிமுகம் ஆகலாம் என கூறப்படுகிறது.

குறைந்த விலையில் தரமான ‘Redmi Buds 5’ அறிமுகம்