அடடே! பப்பாளிப் பழத்தில் இவ்வளவு சத்துக்களா? இது தெரிஞ்சா தூக்கி போட மாட்டிங்க!

Lifestyle

பப்பாளி பழம் நிறைய நோய்களை தடுக்கக்கூடியது அதுமட்டுமில்லாமல் நிறைய நோய்களுக்கு மருந்தாகவும் அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

01

இந்த பப்பாளி பழத்தை நாம் எப்படி சாப்பிட வேண்டும் யாரெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

02

இப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழமாகும். ஒரு துண்டுகள் போதுமானதாகும்.

03

வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண்ணுக்கு மிகவும் நல்லது. கண் பிரச்சனைகளை தடுக்கும். வாரத்திற்கு மூன்று நாட்கள் சாப்பிடலாம்.

04

நல்ல ஜீரண சக்தியை கொடுக்கக்கூடிய பழமாகும். விதையுள்ள பப்பாளியை எடுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

05

மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் அரை பழமாக சாப்பிட்டு வந்தால் குணமாகும்

06

உடல் எடை குறைப்பவர்கள் இந்த பழத்தை ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

07

கர்ப்பிணி பெண்கள் 5 மாதத்திற்கு பிறகு ஒரு பீஸ் அளவு எடுத்துக் கொள்ளலாம். அதுவும் பழ  சாலட்டுடன் சேர்த்து தான் உண்ண வேண்டும்.

08

ஒரு வாரம் தொடர்ந்து பப்பாளி பழத்தை நம் சருமத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வர முகம் பளபளப்பாகி முகத்திற்கு நல்ல ஒரு பொலிவைத் தரும்.

09

விட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்கும்.

10

Thanks For Watching