சொன்னதை செய்த ஆனந்த் மஹிந்திரா ! பிரக்யானந்தாவிற்கு சொகுசு கார் !

உலகில் செஸ் விளையாடும் செஸ் வீரர் பட்டியலில் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்செனை எதிர்த்து இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா விளையாடினார்.

மேக்னஸுக்கு ஈடு கொடுத்து நன்றாக விளையாடிய அவர் இறுதியில் தோல்வியடைந்தார்.

உலகக் கோப்பை செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்று வரை சென்ற முதல் இளம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.

பிரக்ஞானந்தாவிற்கு,1 கோடிக்கும் அதிகமான X பயனர்கள் மஹிந்திராவின் தார் காரை பரிசாக அளிக்க ஆனந்த் மஹிந்திராவிற்கு கோரிக்கை விடுத்தனர்.

அப்போதே ஆனந்த் மஹிந்திரா ‘நான் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு, மஹிந்திரா XUV 400 காரை பரிசாக அளிக்க போகிறேன்’ என அவரது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது,அவர் கூறியது போல XUV 400 என்ற எலக்ட்ரிக் காரை இன்று பரிசாக அளித்துள்ளார்.

பிரக்யானந்தா,“நான் காரை பெற்றேன். எனது பெற்றோர்கள் மிகவும் சநதோஷம் அடைந்துள்ளனர்.

ஆனந்த் மஹிந்திராவிற்கு நன்றி ”என அதற்கு நன்றி தெரிவித்து அவரது X தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

இதனால், தொழிலாளிதிபரும் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திராவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

NZvsAUS : 30 வருடங்களாக சாதனை படைத்து வரும் ஆஸ்திரேலியா ..!