Technology

அசத்தலான அம்சங்கள்.. மலிவான விலை.. இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி F15 சீரிஸ்!

சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பான கேலக்ஸி F15 5G சீரிஸ் என்ற பட்ஜெட் பிரண்ட்லி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் 6100+  ப்ராசஸர் மூலம் மூலம் இயக்கப்படுகிறது. மொபைலில் 4 ஆண்டுகள் வரை ஓஎஸ் அப்டேட்டுக்கள் வழங்கபடுகிறது.

4ஜிபிரேம்/128ஜிபி ரோம் கொண்ட Samsung Galaxy Galaxy F15 5G-யின் விலை ரூ.12,999 மற்றும் 6ஜிபி ரேம்/128ஜிபிரோம் கொண்ட மொபைலின் விலை ரூ.14,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆஷ் பிளாக்,ஜாஸி கிரீன் மற்றும் க்ரூவி வயலட் என மூன்று நிறங்களில் வெளிவந்துள்ளது.

Galaxy F15 5G மொபைலானது 6.5-இன்ச் FULL  HD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரெபிரேஸ் ரேட் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட One UI 6-இல் இயங்குகிறது.

Galaxy F15 5G ஆனது குறைந்தது ஆண்ட்ராய்டு 18 வரை OS புதுப்பிப்புகளைப் பெறும்.இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான 6,000 mAh பேட்டரி உள்ளது.

முன்புற கேமராவில் வீடியோ டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (VDIS) உடன் 13MP வருகிறது. இதுபோன்று பின்புறத்தில் 50 MP, 5 MP மற்றும் 2 MP கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.

4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

மேலும் 5ஜி நெட்வொர்க், யுஎஸ்பி டைப்-சி போர்ட் என போன்றவைகளும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

லீக்கான ‘Xiaomi 14 Ultra’ போனின் டிசைன்!