ஆஹா! ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு ரெடியா..!

Lifestyle

பலருக்கும் ஒற்றைத் தலைவலி மற்றும் மூக்கடைப்பு குளிர்காலங்களில் அதிகமாக ஏற்படும். இவற்றை வீட்டிலேயே எவ்வாறு சரி செய்யலாம் என இப்பதிவில் காண்போம்.

அதிக பித்தம், ரத்தக்குழாய் சுருக்கம், மன அழுத்தம், பயம், கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது ஆகியவற்றால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

ஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள்

தலைவலி என்றாலே மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இல்லை இவ்வாறு ஆவி பிடித்தும் சரி செய்து கொள்ளலாம்.

ஆவி பிடித்தல்

அரை லிட்டர் தண்ணீரில் அரை பகுதி எலுமிச்சம் பழத்தோல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

அந்தத் தோல் வெந்து ஆவியாக வரும்போது எந்த பக்கம் (வலது (அ) இடது) தலைவலி உள்ளதோ ஒரு பக்கம் மூக்கை அடைத்து, மறுபக்கம் மூச்சை இழுத்து வெளியே விட வேண்டும்.

இவ்வாறு பத்து முறை செய்தாலே தலையில் உள்ள நீர் வெளியேறி மூக்கடைப்பு மற்றும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

எலுமிச்சையை வேக வைக்கும் போது அதிலிருந்து வெளியேறும் ஆவியானது ரத்தக்குழாயை  விரிவடைந்து அழுத்தத்தை குறைத்து தலைவலியை சீராக்குகிறது.

இந்த முறையை ஐந்து வயது முதல் அனைவருமே பின்பற்றலாம். ஆவி பிடிக்கும் போது கண்களை திறந்து வைக்க கூடாது.

இதுபோல் எளிய முறைகளை பயன்படுத்தி நம்மை காத்துக்கொள்வோம்.

ஐஸ்கிரீம் பிரியர்களே..! ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க….!